×

பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகள் இந்தியாவிற்கே வழிகாட்டத்தக்கவை: இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த இந்திய பத்திரிகை கவுன்சில் குழுவினர், சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரிகை ஆசிரியர்கள், நிருபர்கள், புகைப்படக்காரர்கள், ஒளிப்பதிவாளர்களுடன் கலந்துரையாடினர். பின்னர், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் மோகன், இந்திய பத்திரிகை கவுன்சிலின் அங்கீகாரத்திற்கான துணைக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வினோத் கோஹ்லி மற்றும் உறுப்பினர்கள் ஜெய் சங்கர் குப்தா, கிங்ஷூக் பிராமணிக், பிரசன்ன குமார் மொஹந்தி, எல்.சி.பார்தியா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை கூடுதல் இயக்குநர் செல்வராஜ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது, தமிழ்நாடு அரசு பத்திரிகையாளருக்கு வழங்கும் ஓய்வூதியத் திட்டம், பணிக்காலத்தில் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்ப உதவி நிதி திட்டம், சிறந்த இதழியலாளருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ரூ.5லட்சம் பரிசுதொகையுடன் கூடிய கலைஞர் எழுதுகோல் விருது திட்டம் முதலான பல்வேறு திட்டங்கள் மூலம் பத்திரிகையாளர் நலன்களை காப்பதில் தமிழ்நாடு அரசு ஆற்றி வரும் பணிகள் வியந்து பாராட்டத்தக்கது. பத்திரிகையாளர்களின் நலன்களைக் காப்பதில் தமிழ்நாடு அரசு இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக திகழ்கிறது என கவுன்சில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

The post பத்திரிகையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகள் இந்தியாவிற்கே வழிகாட்டத்தக்கவை: இந்திய பத்திரிகையாளர் கவுன்சில் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu govt ,India ,Press Council of India ,CHENNAI ,Tamil Nadu Government ,Delhi ,Tamil Nadu ,Kalaivanar Arangam, Chennai ,Chennai Secretariat ,
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...